Wednesday, December 1, 2010

RS COMPUTER EDUCATION-RAJASEKAR

அனைவரும் கணினி அறிவை பெற வேண்டும் என்பதே என் அசை .

                                                                                                          உங்கள் ராஜசேகர் ,
altநம்ம கணினி நல்ல Configuration-ல இருந்தாலும், அது Boot ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கும். சில நேரங்கள்ல நம்மளே கடுப்பாயி அணைச்சு போட்டுட்டு போய்டுவோம். கீழ குறிப்பிட்டுறுக்கிற மாதிரி வழிமுறைகள்ல பின்பற்றினா… உங்க கணினி வேகமா Boot ஆகும்…
வழிமுறைகள்:
1. நோட்பேட் (Notepad) திறந்து, "del c:\windows\prefetch\ntosboot-*.* /q" (கொட்டேஷன் இல்லாம) தட்டச்சு செய்யுங்க, பின்னர் "ntosboot.bat" – னு
c:\ – ல சேமிச்சு (Save) வையுங்க.
2. Start menu போய், "Run..." செலக்ட் பண்ணுங்க, "gpedit.msc"-னு தட்டச்சு செய்யுங்க.
3. இப்ப "Computer Configuration" – ன, டபுள் கிளிக் பண்ணுங்க, உள்ள "Windows Settings" டபுள் கிளிக் பண்ணி உள்ள போங்க, "Shutdown" – னு இருக்குற ஆப்சன கிளிக் பண்ணுங்க.
4. ஒரு புதிய விண்டோ ஓப்பன் ஆகும், கிளிக் "add", "Browse"-ல போய், முன்ன சேவ் பண்ண File, ஓப்பன் பண்ணுங்க.
5. கிளிக் "OK", "Apply" & "OK",
6. திரும்பவும் "Run..." வந்து, "devmgmt.msc" தட்டச்சு செய்யுங்க.
7. டபுள் கிளிக் "IDE ATA/ATAPI controllers".
8. "Primary IDE Channel" – ல, Right click பண்ணி, "Properties" செலக்ட் பண்ணுங்க.
9. "Advanced Settings" tab கிளிக் பண்ணி, 'none' கொடுங்க.
10. "Secondary IDE channel", Right click பண்ணி "Properties" போய் 9த் ஸ்டெப்ல பண்ண மாதிரி "OK" கொடுங்க.
11. கடைசியா உங்க கணினிய ரீபூட் (Reboot) செச்சு Check பண்ணுங்க
                                                                                                                                                                              
      
altஇயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் புறொக்கிறாம்களை (மென்பொருள்களை) Soft Ware என்றும் அழைப்பர். ஒபறேற்ரிங் சிஸ்ரம் (மென்பொருள்)
குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது.

கணினியில் Hard ware (கடுமயான உறுப்பு) இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் புறொக்கிறாம்கள் (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணினியே சீர் செய்யக்கூடிய வசதிகள் ஒபறேற்ரிங் சிஸ்ரம் வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பெற்றுள்ளன.

நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனறறதாகி விடுகின்றது. கணிணி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணினி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணினி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம்.

சில இனையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install) உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணினிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணினியை செயலிளக்கச் செய்கிறது. எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வளிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும். நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணினிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணினியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம்.

கணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள்.
கணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒபறேற்றிங் சிஸ்ரம்; கணினி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல்.

எப்படிச் செய்வது?:
உங்கள் கணினியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும்.

அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும். அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியை ஸ்கான் செயலாம். Defragment Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now எனபது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம்.


Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும். சில ஒபறேற்றிங் சிஸ்ரம் கணினி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்க்கும். அதற்கும் Yes பொத்தனை அழுத்தவும்.

இப்போது; கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணினியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது. கணினி ஸ்கான் செவதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்.
  
                                                                                                                                                                      

alt
கணினி என்பது பல எலொக்ரொனிக் இளைகளினால் ஆன (transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால்) பல உறப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஓர் எலெக்ரொனிக் இயந்திரத்தை;
ஒபறேற்ரிங் சிஸ்ரம் என்னும் புறோகிறாம் மூலம் இயங்கச் செய்து, அதன் மூலம் ஒரு வேலையை துல்லியமாகவும், வேகமாகவும்; தன்னிச்சையாக செயல் பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணினி என அழைக்கப் பெறுகின்றது.

கணினியின் முழுச் செயற்பாட்டிற்கும் அதில் உட்புகுத்தப் பெற்றுள்ள ஒபறேற்ரிங் சிஸ்ரமே அடித்தளமாகவும், உந்துசக்தியாகவும் அமைந்து; எல்லா உறுப்புகளையும் ஒன்றாக இணைத்து இயக்குகின்றது. அது Application Software ன் பாவனையின் போது அதனுடன் இணைந்து அது இயங்கும் மேடையாக அமைந்து தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, அவ்வப்போது அவற்றில் முன்கூட்டியே பதியப்பெற்றுள்ள உபதேசங்களிற்கு அமைய; கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் CPU க்கு வழங்குவது ஒபறேற்ரிங் சிஸ்ரமே.

கணினிகளின் வகைகள்:
எல்லோருடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பலவித அளவுகளில் கணினிகள் உருவாக்கப் பெற்று, அவைகள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப் பெற்றுள்ளன.

அவையாவன:
1. Personal -Computers;
Desktop - Pc
Tower - Pc
Laptop - Pc
Hand held - Pc
Network - Pc
(PC - Personal Computer - பிரத்தியேக கணினி என பொருள்படும்)

2. Mini - Computers: இது ஒரு டிபாட்மென்ரில் பாவிப்பது. இதன் மூலம் நூற்றுக் கணக்கான கணினிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

3. Mainfram - Computers: பெரிய நிறுவனங்களில் பாவிப்பது. இதன் மூலம் பல ஆயிரம் கணினிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

4. Super - Computers: நாசா போன்ற பெரிய ஆராச்சி நிலையங்களில் பாவிப்பது. வேகத்தில் கூடியதும், மில்லியன் கணக்கான வேலைகளை ஒரு செக்கண்டில் செய்யக்கூடியது.

இந்த எலெக்ரொனிக் (System Unit) இயந்திரத்தை உடம்பு எனவும், அதனை இயக்கும் (Operating System) ஒபறேற்ரிங் சிஸ்ரம் எனும் புறோக்கிறாமை உயிர் எனவும் அழைப்பர். உயிர் புகுத்தப்பெறாவிடில் உடலான இயந்திரம் இயங்காது. இந்த இயந்திரத்தில் உள்ள உறுப்புகளை Hard Ware "வன் பொருள்" எனவும்; இதில் (Install) உள்ளூட்டல் செய்யப்பெற்ற Operating System த்தையும் Application softwar யும் Soft Ware "மென் பொருள்" எனவும் அழைப்பார்கள்.

இந்த எலெக்ரொனிக் இயந்திரத்திற்கு மனித மொழி தெரியாது, ஆனால் மின்சாரம் பாயும் போது ”on” "1" என்பதையும் மிசாரம் இல்லாத பொழுது ”off” "0" என்பதனை மட்டும் உணரக்கூடியது. இதனை ஆதாரமாக வைத்தே இதனை இயக்கும் Soft Ware என்னும் மென்பொருள் Operating System எழுதப் பெற்று Install செய்கின்றார்கள். அதன் பின்னரே மனித மொழியை கணினி புரிந்து செயல்படுகின்றது. இந்த Soft Ware எழுதுவதற்கென்றே பல கணினி மொழிகள் உருவாக்கப் பெற்றுள்ளன (C++, Java, Pascal போன்றவை).


                                                                                                                                                                                          

altஇன்று உலகம் விரிவடைந்துள்ளது அது போல் மனிதனின் தொடர்பாடலும் விரிவடைந்து காணப்படுகின்றது. அவன் காலையில் எழுந்து, மாலை வரை அவனால் ஏதாவது ஒரு விடயம் தொடர்பாக தனது உறவினருடன்,
நண்பர்களுடன், மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் தனது காதலியுடன்
இவ்வாறு பல்வேறு தரப்பினருடன் அவன் தனது தொடர்புகளை இன்று இணைத்துக் கொள்கிறான். இவ்வாறு பல வகையான தொடர்பாடல்கள் மேற்கொண்டாலும் அவனால் பேசப்படும் பல விடயங்கள் அவனுக்கு முக்கியமானதாகக் காணப்படுகின்றது. தான் நண்பர்களுடன் மற்றும் உறவினர், காதலி, காதலன் போன்றோர்களிடம் பேசப்படும் பேச்சுக்களை திரும்பவும் கேட்க வேண்டும் அல்லது அவனது ஏதாவது ஒரு ஆதாரத்திற்கு அதனைப் பயன்படுத்தி அவர்களுக்குள்ள தொடர்புகளை விருத்தி செய்து கொள்ள இன்று உலகில் அதிகளமான பயனாலார்கள் பயன்படுத்தப்படும் PC to PC and PC to Phone இப்படி பல்வேறுபட்ட இணைப்புக்களை மேற்கொள்ளும் நாம் இன்று எல்லாரோலும் பயன்படுத்தப்படுகின்ற Skype and Google Talk and Yahoo IM போன்றவற்றில் நாங்கள் உரையாடும் போது அந்த உரையாடல்களை Recording செய்து கொள்ள இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் Software பயன் உள்ளதாக அமையும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். alt





 

                                                                                                                                                                   
தமிழ் பழமொழிகள்                                                                                                                                                                     
  1. ஆத்துல    கொட்டுனாலும்  அளந்து  கொட்டனும்
  2. அஆற்றில் தண்ணீர்  அலைமோதி சென்றாலும்  நாயின்  தாகம்  நக்கிதான்  தீரும் 
  3. ஆச்சி  பிச்சை  எடுக்க  தம்பி  கும்பகோணம்  போனாராம்
  4. ஆதாயம்  இல்லாமல்  செட்டி  ஆத்துல  இறங்க  மாட்டார் 
  5. ஆடி  காதுக்கு  அம்மியும்  நகரும்
  6. ஆடு  நனையுதுன்னு  ஓநாய்  அழுததாம்
  7. ஆடுற  மாட்டை  ஆடிக்  கறக்க  வேணும்  பாடுற  மாட்டை  பாடிக்  கறக்க  வேணும்   
  8. ஆறு  கடக்கிற  வரியில்  அண்ணன்  தம்பி , ஆறு  கடந்த  பின்  நீ  யாரோ  நான்  யாரோ ?
  9. ஆத்துல  வெள்ளமே  போனாலும்  நாய்  நாக்கை  தான் குடிக்கும்
  10. ஆவதும்  பெண்ணாலே  அழிவதும்  பெண்ணாலே
  11. ஆழம்  தெரியாமல்  காலை விடாதே
  12. அடக்கமே  பொண்ணுக்கு  அழகு
  13. அதட்டி  வளர்க்காத  பிள்ளையும்  முறுக்கி  வளர்க்காத  மீசையும்  ஒழுங்காக  இருக்காது
  14. அடுத்த  வீடுகாரனுக்கு  அதிகாரம்  வந்தால்  அண்டை  வீடுகரனுக்கு  இரைச்சல்  லாபம்
  15. அள்ளி  கொடுத்த  சும்மா , அளந்து  கொடுத்தல்   கடன்
  16. அற்பனுக்கு  வாழ்வு  வந்தால்  அர்த்த  ராத்திரியில்  குடை  பிடிப்பான்
  17. அழுகிற  ஆணையும்  சிரிக்கும்  பெண்ணையும்  நம்பக்கூடாது
  18. புத்திகெட்ட  ராஜாவுக்கு  மதிகெட்ட  மந்திரி
  19. காக்கை  குளித்தாலும்  கொகாகும ?
  20. காக்க  உட்கார பணம்  பழம்  விழுந்தது 
                                                                                                                                                                                    
 

1 comment: